இறைவனின் தூரிகையில்
வரையப்பட்ட துயரங்கள் நாங்கள்
குண்டு முழக்கங்களே எம் குழந்தைகளின்
தாலாட்டுப் பாடலாய்…
எமனிடம் குத்தகை பெற்று
எம்மவர்களை கொன்று குவித்த ஓர்
அரசாங்கம் இங்கே…
உரிமைகள் இழந்தோம்
உறவுகள் மறந்தோம்
உறைவிடம் துறந்தோம்
இழப்பதற் கொன்றுமில்லை
இனிமேலும்…
அழகான தேசம் தந்தவர்கள் அதில்
அமைதி தர மறந்ததேனோ?
தமிழனாய் பிறந்ததில்
தவறேதுமுண்டோ? விடிகிற
ஒவ்வொரு பொழுதும் விடியலைத்
தேடியே..